காணாமல் போன நிலா
காணாமல் போன நிலா/கொ.மா.கோ.இளங்கோ நிலவை இடியாப்பமென யாரோ சொல்லி வைத்திருந்தார்கள் தெருவில் இடியாப்பம் விற்கும் ஆச்சியின் குரல் கேட்ட திசையில் தட்டை நீட்டி விடுகிறாள் யாத்வி குட்டி ரூபாய்க்கு இரண்டு நிலவைத் தரச் சொல்லி மேகம் மூடி மறைத்துவிட்ட நிலவைக் காணாது இடியாப்பத்தை எவரோ திருடிவிட்டதாய்ச் சொல்லி தேம்பித் தேம்பி அழுகையைத் துவக்குகிறாள் பெரும் இடி இரைச்சலோடு அழத் தொடங்கியது பெருமழை (இக்கவிதை 14.09.2011 தேதியிட்ட ஆனந்த விகடன் / சொல்வனம் பகுதியில் கொ.மா.கோ.இளங்கோ படைத்த கவிதையாகும். நன்றி