தாட்சாயினி/கனிமொழி கவிதைகள்



மிகுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கவிதையில்
           கனிமொழி கவிதைகள்-         தாட்சாயினி 

ஈசன் 
ஒரு யோக ரௌத்திரத்தில் ஆழ்ந்திருந்தான்.
ஈஸ்வரி தலைவிரித்து 
ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள்.
ஈசன் குறி பார்த்து அம்புகள் எய்து கொண்டிருந்தான்.
அவன் திருநீலகண்டத்தில் தோய்ந்த கணைகளில் 
ஈஸ்வரி கரைந்தழிந்து கொண்டு இருந்தாள்.
நிணம், மனம், எல்லாம் அழிந்து உருகின .
நீலம் பாரித்து இற்று விழுந்து கொண்டிருந்தாள்.
"என்னை அவமதித்த அற்ப மானிடன் தட்சனின் விந்து தானே நீ?"
தட்சனின் விந்து...
"உன்னை சுமந்த பின்பு, உன்னில் பாதியாய் 
அர்த்தநாரியாய் ஆன பின்பும் தக்ஷனின் கழிவுதான் நான்.
எரிந்தாள்,  அரற்றினாள் 
அவள் கடைசி நம்பிக்கையும்
சாம்பலாய் உதிர்ந்தது.

விதைத்தவனைக் கேட்கப் போய்
 ஊழித்தாண்டவமாடினாள்.
சபித்தாள். 
யாகத்தில் பஸ்பமானாள். 
அவளும் அவள் அகந்தையும்
அகங்காரமும்   
அழிந்தபின் 
அருள் பாலித்தான் ஈசன்.
புதியவளாய் பிறந்தாள் பார்வதி
 ஒற்றைக் காலில் ஓராயிரம் வருடம் தவமிருந்தால் 
மறுபடியும் சிவபத்தினி.

பாவம் 
முக்காலும் உணர்ந்த 
ஈசனுக்கு மறக்குமா 
அவள் தாட்சாயினி 
என்பது .






Comments

Popular posts from this blog

காணாமல் போன நிலா

சோவியத் கவிதை/காதலைப் பற்றி