சோவியத் கவிதை/காதலைப் பற்றி
நான் எனது பதின்பருவங்களில் இரசித்த காதல் கவிதைகளில் சோவியத் படைப்பாளியான செல்வின்ஸ்கி யின் கவிதைகளில் காதலைப் பற்றி எழுதிய கவிதையும் ஒன்றாகும். அதனை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்,
என்.கம்கோராஜா
காதலைப் பற்றி
( ஐ. செல்வின்ஸ்கி )
'இறந்தோ, கண்மறைந்தோ, நானொருநாள் ஏகிடின்,நீ வருந்தியழப் போவதில்லை ; வாராதுனக்கு அவ்வழுகை /
உன் வாழ்வின் திரும்புமுனையானல்ல ; உண்மை இது.
உன்வாழ்வு நானின்றேல் ஒன்றுமற்றுப் போகாது.
உன்னிதயப் பெட்டகத்தின் உள்ளேயோர் மரங்கொத்தி
தன்னலகால் வாழ்க்கையின் நற்செய்தியினைத்
தட்டுவதும்
எனக்காக வேதாமனோ? இல்லையில்லை ! உண்மையிலே
உனக்கேதான் நான்யாராம் ? ஒருவேளை--ஓர் நண்பன்:
என்றாலும்
என் பங்கிற்கெனக்கும்தான் சில உரிமை இன்றுண்டு.
எத்திசையும் தப்பிவிட இயலாத .
வட்டமெனத்தான் வளைக்கும் வளையமொத்த காதலிலே
கட்டுண்டால் வழியேது? கருத்தை அழிக்குமொரு
பித்தம் தலைக்கேறிப் பிடித்திட்டால் எப்படியோ
அத்தகைய காதல்இது. காதலுக்கே ஆட்பட்ட,
புறவொன்று மற்றையொரு புறவின் அரவணைப்பைப்
பெறுவதற்காய், அப்புறவைப் பிரியமொடு தான் அகவி
அழைப்பதற்காய், மூச்செறியும் அன்புச் சிறகிடையே
இழுத்தணைத்துக் கொள்வதற்காய், பெடைப்புறவின் இதயத்தின்
ஆழ்ந்த துடிப்பொடுதன் அன்பிதயத் துடிப்பதுவும் ஆழ்ந்து நேர்முகமாய் அழுந்தும் பரவசத்தின் இன்பினுக்காய், பெடைதனக்கே எதனையுமே ஈந்துவிடும்!
அன்பின் வலிமையது! ஆனாலும், வேறுபட்ட.
நாமறிந்த நட்புறவும், நாமறிந்த மனவுணர்வும்
ஆம், உலகில் உண்டுண்டு. அவ்வுறவில், அறிந்தவர்கள்
சும்மா சந்தித்து, சுகம்கேட்டு விசாரித்துத்
தம்முள் கைகுலுக்கித் தன்வழியே செல்வதுபோல்,
_ காதல்மொழி, கைச்சரசம், கடிதங்கள், சந்திப்பு
ஈதெல்லாம் தேவையில்லை. என்கண்கள் எங்கெங்கே
திரும்பிடினும் அங்கெல்லாம் தென்படுவது உன் கண்ணே?
நரம்பொன்று என்னுடம்பின் நார்க்கூட்டம் தம்மிடையே
புதிதாகக் கிளைவிடுத்துப் புடைத்துத் துடிப்பதுபோல்
அதையுணர்வேன்! நிச்சயமாப் அறிவாய் நீ
ஒன்றுமட்டும் ;
பொல்லா வசைமொழிகள், பொய்கள், பழிதூற்றல்
எல்லாம் உனைத்தமக்கே இரையாக்கி விட்டாலும்,
துன்பினிலும் இன்பிலுமுன் துயர்துடைக்க, உன்னருமை
அன்பன், அதே அரவணைக்கும் அருள் பொழியும் கண்களொடு
காலமெலாம் உறுதியொடு காத்திருப்பான்!
இக்கண்கள்
மேலான ௮ன்பொடுனை வரவேற்கும் களித்தாடும் பேர்வழியைப் போலல்ல / பெண்ணணங்கே ! நீஎனக்குப்
பூரணியாய்த் தோற்றுகின்ற புண்ணியமோ? அல்லல்ல !
தாரணியில் உன்னப்போல் வேரரருவர் தனைக்காணாக்
காரணத்தால் என்னிரண்டு கண்ணுமுனைவரவேற்கும் !
Comments
Post a Comment